Saturday, July 14, 2012
இலவசமாக Recharge
தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செய்துக் கொள்ளலாம்.
தினமும்
350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும், இது உண்மைதான்
நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள். தினமும் Login செய்வதற்கு 20 பைசா
கொடுக்கிறார்கள். நாம் நம் தளத்தில் நிறைய
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால்
வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
பூத்துவிடும். ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால்
வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
பூத்துவிடும். ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
Facebook
அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை
இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20% கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள்.
இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம்.
தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.
http://www.amulyam.in/register.do?id=5f5f65f8-8a39-46b2-86c7-94a9c9ef28e0&sid=1
மிக எளிமையாக Paypal கணக்கு துவங்குவது எப்படி?

இது வரை இந்தியர்கள் Paypal கணக்கு துவங்குவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் CreditCard இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தது.
இனிமேல் CreditCard தேவையில்லை. இந்தியர்கள் அதிகமாக Paypal பயன்படுத்துவதை உணர்ந்த அந்த நிறுவனம் புதிய கணக்குகளை துவங்குவதை எளிமையாக்கியுள்ளது.
இந்த தொடுப்பை க்லிக் செய்யவும் https://www.paypal.com/in/cgi-bin/webscr?cmd=_flow&SESSION=SVop9QZ7TQipDfjZjSNQGfIC_RXXq5NHwQjwaxToOXlQpvLe667qgV67ha4&dispatch=5885d80a13c0db1f8e263663d3faee8d7283e7f0184a5674430f290db9e9c846
STEP 2: “Business” எனும் மூன்றாவது பிரிவில் உள்ள “Get Started” எனும் buttonஐ க்லிக் செய்யவும்.
Business கணக்கில் தான் உங்களால் பிறரிடம் இருந்து அவர்களின் CreditCard வழியாக வரும் பணத்தைப் பெற முடியும்.
நீங்கள் பிற முறையான “Personal” “Premier” வகையான கணக்குகளையும் ஆரம்பிக்கலாம்.
STEP 3: பின்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
STEP 4: தங்களின் மின்னஞ்சளுக்கு ஒரு verification link அனுப்பப்படும்.
STEP 5: பிறகு உங்களின் paypal கணக்கில் login செய்யவும்.
STEP 6: இது தான் மிகவும் முக்கியமான படி., Status: Unverified Get verified இதில் “Get Verified” என்பதை க்லிக் செய்யவும்.
Paypal லில் Verified செய்யப்பட்ட கணக்கு இருந்தால் தான் உங்களால் பணத்தை $500 க்கு மேல் பரிவர்த்னை செய்ய இயலும்.
STEP 7: “Add Bank Account” எனும் பகுதியில் சென்று பின்வரும் விவரங்களைக் கொடுக்கவும்.
Account Number:
Account Holder Name: உங்களின் paypal கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெரியராக இருக்க வேண்டும்.
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் தளத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
http://bankifsccode.com/
http://www.indian-banks.info/
STEP 8: பிறகு “Add Bank Account” எனும் button ஐ க்லிக் செய்யவும்.
STEP 9: Paypal நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2 பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும். அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை 2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். பொதுவாக அந்தப் பண மதிப்பு 1.47 Rs. போன்று மூன்று இலக்க மதிப்பில் இருக்கும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுக்கவேண்டும்.
அவ்வளவுதான், நீங்கள் இனி இணையம் வழியாக யாரிடமும் எந்த நாட்டில் இருந்தம் பணத்தைப் பெறலாம். அந்தப் பணத்தை எளிதாக உங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.
Sunday, July 8, 2012
லாபம் தரும் தலைச்சேரி மற்றும் போயர் கலப்பின ஆட்டு பண்ணை தமிழகத்தில் மாறி வரும் உணவுப்பழக்கத்தால் ஆண்டுக்கு ஆண்டு இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆடு வளர்ப்பு தொழிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் கன்னி, கொடி என்ற இரண்டு வகையான ஆட்டு இனங்கள் தான் பெருமளவில் காணப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைச்சேரி என்ற ஆட்டு இனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை ஆடுகள் கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக கருதப்பட்டது. தலைச்சேரி இன ஆடுகளின் இறைச்சி சுவையாகவும், அதன் பால் சுரக்கும் திறன் அதிகமாகவும் இருக்கிறது. குறிப்பாக விவசாயம் பொய்க்கும் காலங்களில் ஆடுகள் விவசாயிகளுக்கான பொருளாதார தேவையை ஈடுகட்டும் செல்வங்களாகவே உள்ளன. இதனால் தலைச்சேரி உள்பட ஆடு வளர்ப்பு தொழில் மதிப்பு மிகுந்ததாக மாறி வருகிறது. சமீபகாலமாக தலைச்சேரி இனம் மற்றும் வெளிநாட்டு இனமான போயர் இன ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஆடுகளுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. இங்கு அது பற்றி பார்க்கலாம். மலபாரி என்னும் தலைச்சேரி தலைச்சேரி ஆடு என்று பரவலாக அழைக்கப்படும் இந்த ஆட்டு இனத்திற்கு மலபாரி என்றும் பெயர் உண்டு. தூய வெள்ளை நிறம் முதல் முழுக்கருப்பு நிறம் வரையில் பல நிறங்களில் இந்த ஆடுகள் காணப்படுகின்றன. இந்த ஆடுகளில் ரோமங்கள் மற்ற இன ஆடுகளை விட அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக உடலின் 30 சதவீத ரோமம் இந்த ஆட்டின் தொடைப்பகுதியில் மட்டும் காணப்படும். இந்த இன கிடாக்களுக்கு தாடி உண்டு. இவை இரண்டரை அடி முதல் 3 அடி உயரம் வரை வளரும். மூக்கு சிவந்து காணப்படும். இதன் இறைச்சி மாற்றும் திறன் 48 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. இனக்கலப்பில் உருவாகும் புது இனம் இந்த வகை இயல்புகள் கொண்ட தலைச்சேரி இனத்துடன் அயலின கலப்பு என்ற அடிப்படையில் புதிய இயல்புகள் கொண்ட குட்டிகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக போயர் என்ற வெளிநாட்டின ஆட்டு இனத்துடன் தலைச்சேரி ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட குட்டிகள் 6 மாதத்தில் 20 கிலோ எடை கொண்டதாக வளருகிறது. அதாவது, இப்படி உருவாக்கப்படும் புதிய இன ஆடுகள் துரித வளர்ச்சி கொண்டதாகவும், இறைச்சியில் கூடுதல் சுவை கொண்டதாகவும் இருக்கின்றன. தலைச்சேரி போயர் இன ஆட்டுப்பண்ணை தலைச்சேரி மற்றும போயர் இன கலப்பின குட்டிகளை உருவாக்கி வளர்க்க சிறிய அளவு முதலீடு போதுமானது. நிரந்தர முதலீடாக 60 க்கு 20 என்ற அளவில் தென்னை மர சட்டங்களால் ஆன சல்லடை தரை அமைப்பை கொண்ட கொட்டகையை அமைக்க வேண்டும். இந்த வகையான கொட்டகை தரையிலிருந்து 4 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். அன்றாட செலவீனம் ஒரு முறை சாகுபடி செய்தால் பல ஆண்டுகள் பலன் தரக்கூடிய ஒட்டு வகை பசுந்தீவங்களான வேலிமசால், சவுண்டல், தீவனச்சோள ரகங்கள் 27,29, கோ4, அகத்தி (தீவனவகை), கிளிரிசிடியா மரங்கள், தட்டைப்பயறு போன்றவற்றை ஆட்டு பண்ணைக்கு அருகில் உள்ள தரிசுநிலங்களில் பயிரிட்டு வரவேண்டும். ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் பசுந்தீவனமானது 25 தலைச்சேரி ஆடுகளுக்கும் அதனால் உருவாக்கப்படும் கலப்பின குட்டிகளுக்கும் போதுமானது. நிரந்தர வருமானம் தலைச்சேரி இன ஆடுகள் ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி ஈனும் இயல்புடையது. ஒரு ஆட்டிலிருந்து 2 வீதம் 25 ஆடுகளுக்கு 50 குட்டிகள் வரை கிடைக்கும். 6 மாத கால அளவில் இந்த எண்ணிக்கையிலான குட்டிகளை 3 லட்சம் ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யலாம். இதில் குட்டிகள் தீவனம் மற்றும் பராமரிப்புக்கு 1 லட்சம் வரை செலவு செய்யப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் 2 லட்சம் வரை நிகர லாபமாக கிடைக்கும். இந்த ஆடுகளை கொண்டு பண்ணை அமைப்பவர்கள் இறைச்சிகடை மற்றும் இனவிருத்தி பண்ணைகளை தனியாக அமைத்துக் கொண்டால் அதன் மூலமாகவும் தனியாக வருமானம் பெற முடியும். தமிழத்தில் முதல் முறையாக மிகநவீன கொட்டகை அமைப்பில் மதுரை மேலூரை அடுத்த வஞ்சி நகரத்தில் உள்ள பழனி ஆண்டவர் பண்ணையில் இது போன்ற தலைச்சேரி போயர் இன கலப்பின ஆடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் தொழிலாக செய்ய விரும்புபவர்களும், கால்நடைத் தொழிலில் இறங்கி முன்னேற விரும்பும் இளைஞர்களும் இந்த பண்ணையை மாதிரியாக கொண்டு தங்களது தொழிலை அமைத்துக் கொள்ளலாம். இது பற்றிய விவரமறிய எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். விவசாயத்தில் கூலி அதிகரிப்பு, விவசாய நிலங்கள் சுருங்குதல், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என்று பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலையில் ஆடு வளர்ப்பு மிகச்சிறந்த லாபம் தரும் பண்ணை தொழில் என்பதில் மாற்றமில்லை.
தமிழகத்தில் மாறி வரும் உணவுப்பழக்கத்தால் ஆண்டுக்கு ஆண்டு இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆடு வளர்ப்பு தொழிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் கன்னி, கொடி என்ற இரண்டு வகையான ஆட்டு இனங்கள் தான் பெருமளவில் காணப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைச்சேரி என்ற ஆட்டு இனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை ஆடுகள் கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக கருதப்பட்டது. தலைச்சேரி இன ஆடுகளின் இறைச்சி சுவையாகவும், அதன் பால் சுரக்கும் திறன் அதிகமாகவும் இருக்கிறது. குறிப்பாக விவசாயம் பொய்க்கும் காலங்களில் ஆடுகள் விவசாயிகளுக்கான பொருளாதார தேவையை ஈடுகட்டும் செல்வங்களாகவே உள்ளன. இதனால் தலைச்சேரி உள்பட ஆடு வளர்ப்பு தொழில் மதிப்பு மிகுந்ததாக மாறி வருகிறது. சமீபகாலமாக தலைச்சேரி இனம் மற்றும் வெளிநாட்டு இனமான போயர் இன ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஆடுகளுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. இங்கு அது பற்றி பார்க்கலாம்.
மலபாரி என்னும் தலைச்சேரி
தலைச்சேரி ஆடு என்று பரவலாக அழைக்கப்படும் இந்த ஆட்டு இனத்திற்கு மலபாரி என்றும் பெயர் உண்டு. தூய வெள்ளை நிறம் முதல் முழுக்கருப்பு நிறம் வரையில் பல நிறங்களில் இந்த ஆடுகள் காணப்படுகின்றன. இந்த ஆடுகளில் ரோமங்கள் மற்ற இன ஆடுகளை விட அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக உடலின் 30 சதவீத ரோமம் இந்த ஆட்டின் தொடைப்பகுதியில் மட்டும் காணப்படும். இந்த இன கிடாக்களுக்கு தாடி உண்டு. இவை இரண்டரை அடி முதல் 3 அடி உயரம் வரை வளரும். மூக்கு சிவந்து காணப்படும். இதன் இறைச்சி மாற்றும் திறன் 48 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது.
இனக்கலப்பில் உருவாகும் புது இனம்
இந்த வகை இயல்புகள் கொண்ட தலைச்சேரி இனத்துடன் அயலின கலப்பு என்ற அடிப்படையில் புதிய இயல்புகள் கொண்ட குட்டிகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக போயர் என்ற வெளிநாட்டின ஆட்டு இனத்துடன் தலைச்சேரி ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட குட்டிகள் 6 மாதத்தில் 20 கிலோ எடை கொண்டதாக வளருகிறது. அதாவது, இப்படி உருவாக்கப்படும் புதிய இன ஆடுகள் துரித வளர்ச்சி கொண்டதாகவும், இறைச்சியில் கூடுதல் சுவை கொண்டதாகவும் இருக்கின்றன.
தலைச்சேரி போயர் இன ஆட்டுப்பண்ணை
தலைச்சேரி மற்றும போயர் இன கலப்பின குட்டிகளை உருவாக்கி வளர்க்க சிறிய அளவு முதலீடு போதுமானது. நிரந்தர முதலீடாக 60 க்கு 20 என்ற அளவில் தென்னை மர சட்டங்களால் ஆன சல்லடை தரை அமைப்பை கொண்ட கொட்டகையை அமைக்க வேண்டும். இந்த வகையான கொட்டகை தரையிலிருந்து 4 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
அன்றாட செலவீனம்
ஒரு முறை சாகுபடி செய்தால் பல ஆண்டுகள் பலன் தரக்கூடிய ஒட்டு வகை பசுந்தீவங்களான வேலிமசால், சவுண்டல், தீவனச்சோள ரகங்கள் 27,29, கோ4, அகத்தி (தீவனவகை), கிளிரிசிடியா மரங்கள், தட்டைப்பயறு போன்றவற்றை ஆட்டு பண்ணைக்கு அருகில் உள்ள தரிசுநிலங்களில் பயிரிட்டு வரவேண்டும். ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் பசுந்தீவனமானது 25 தலைச்சேரி ஆடுகளுக்கும் அதனால் உருவாக்கப்படும் கலப்பின குட்டிகளுக்கும் போதுமானது.
நிரந்தர வருமானம்
தலைச்சேரி இன ஆடுகள் ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி ஈனும் இயல்புடையது. ஒரு ஆட்டிலிருந்து 2 வீதம் 25 ஆடுகளுக்கு 50 குட்டிகள் வரை கிடைக்கும். 6 மாத கால அளவில் இந்த எண்ணிக்கையிலான குட்டிகளை 3 லட்சம் ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யலாம். இதில் குட்டிகள் தீவனம் மற்றும் பராமரிப்புக்கு 1 லட்சம் வரை செலவு செய்யப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் 2 லட்சம் வரை நிகர லாபமாக கிடைக்கும்.
இந்த ஆடுகளை கொண்டு பண்ணை அமைப்பவர்கள் இறைச்சிகடை மற்றும் இனவிருத்தி பண்ணைகளை தனியாக அமைத்துக் கொண்டால் அதன் மூலமாகவும் தனியாக வருமானம் பெற முடியும்.
தமிழத்தில் முதல் முறையாக மிகநவீன கொட்டகை அமைப்பில் மதுரை மேலூரை அடுத்த வஞ்சி நகரத்தில் உள்ள பழனி ஆண்டவர் பண்ணையில் இது போன்ற தலைச்சேரி போயர் இன கலப்பின ஆடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் தொழிலாக செய்ய விரும்புபவர்களும், கால்நடைத் தொழிலில் இறங்கி முன்னேற விரும்பும் இளைஞர்களும் இந்த பண்ணையை மாதிரியாக கொண்டு தங்களது தொழிலை அமைத்துக் கொள்ளலாம்.
விவசாயத்தில் கூலி அதிகரிப்பு, விவசாய நிலங்கள் சுருங்குதல், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என்று பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலையில் ஆடு வளர்ப்பு மிகச்சிறந்த லாபம் தரும் பண்ணை தொழில் என்பதில் மாற்றமில்லை.
ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!
இந்நேரத்தில் பத்திரிக்கைகளில் ஈமு கோழியைப் பற்றிய விளம்பரம் வந்திருந்தது. ஈமு கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து முட்டை உற்பத்தி செய்து கொடுத்தால், முட்டை ஒன்றை 2000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறோம் என்று அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்து. அந்த விளம்பரத்தைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்து நம்பிக்கை பெற்ற மாணிக்கம், 2 லட்ச ரூபாயை ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்தார். ஈமு கோழிகளும் வளர்ந்தன. முட்டையும் இட்டன. ஆனால், இப்பொழுது 1000 ரூபாய்க்குக்கூட முட்டை வாங்க ஆளில்லை; வெளியிலும் விற்க முடியவில்லை. ஈமுவுக்குத் தீவனம் போட்டே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கடனாளியாகியிருக்கிறார். இன்று இவரைப்போல நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈமு கோழிப் பண்ணை அமைத்துக் கடனாளியாகி நிற்கிறார்கள்.
விவசாயத்தில் இடுபொருட்களின் கிடுகிடு விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, நிச்சயமற்ற பருவ காலங்கள், விவசாயப் பொருட்களுக்கு சந்தையில் நிச்சயமற்ற விலை, இவற்றால் தொடர் நட்டம் முதலானவற்றின் காரணமாக விவசாயிகள் நொடிந்து போயுள்ளனர். விவசாயம் செய்வது தற்கொலைக்குச் சமம் என்று கருதிப் பலரும் மாற்றுத் தொழிலைத் தேட நிர்பந்திக்கப்படுகின்றனர். இப்படி நடுத்தர சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கான வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்ட பின்னணியில், ஈமு பண்ணை முதலாளிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி விவசாயிகளை ஏய்த்துக் கொள்ளையிடக் கிளம்பியுள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை சுசி பார்ம்ஸ் முதற்கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட ஈமு நிறுவனங்கள் அதிரடித் திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்து வருகின்றன. “”ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செலவில் கோழிகளுக்கான கொட்டகை போட்டு அதில் ஆறு குஞ்சுகள் விடப்படும்; அதற்கான தீவனமும் வழங்கப்படும்; ஈமு கோழி வளர்ப்புக்கு மாதக் கூலியாய் ரூ. 6000 முதல் 9000 வரை கொடுக்கப்படும்” என்றும், “”கோழிகளுக்கு இரண்டு வயதாகி முட்டையிடும் தருவாயில் கோழியை எடுத்துக்கொண்டு, முதலீட்டுப் பணத்தைத் திருப்பித் தருவோம்” என்றும் இந்நிறுவனங்கள் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து வருகின்றன.
மறுபக்கம், விவசாயிகளோ இரண்டு லட்ச ரூபாயை விவசாயத்திலோ அல்லது வங்கியிலோ போடுவதற்குப் பதிலாக இத்திட்டத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்துடன், இத்தகைய ஈமு கோழிப் பண்ணை நிறுவனங்களின் வாயிலில் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மாற்றுத் தொழிலாகவும், விவசாயிகள் காலங்காலமாக செய்து வரும் கால்நடை வளர்ப்பை ஒத்ததாக இருப்பதாலும் இத்தொழிலை விவசாயிகள் பெருத்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். தமிழகத்தில் ஈரோடு, திருச்சி, பல்லடம், புதுக்கோட்டை, வாலாஜாபாத், கொடைக்கானல் முதலான பகுதிகளில் இத்தகைய ஈமு வளர்ப்புப் பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, ஒரிசா, ம.பி. முதலான மாநிலங்களிலும் ஈமு கோழிப்பண்ணைகள் விரிவடைந்து வருகின்றன.
உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை 2005இல் 18,600 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.
“”நன்கு வளர்ச்சியடைந்த ஈமு கோழி 5-6 அடி உயரமும் 50 முதல் 60 கிலோ வரை எடையும் கொண்டதாக இருக்கும். அதில் குறைந்தபட்சம் 35 கிலோ கறி தேறும். சுவைமிக்க ஈமு கறி விலை ஒரு கிலோ ஏறத்தாழ ரூ. 450 ஆகும். ஈமு கோழிகள் கொழுப்பு கொலஸ்ட்ரால் இல்லாதது; ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்த்துமா உள்ளவர்கள் தாராளமாக இதன் இறைச்சியை உண்ணலாம். இக்கோழியின் தோல் சாயமிடுவதற்குப் பயன்படுகின்றன. இதன் இறகுகள் பிரஷ் தயாரிக்கப் பயன்படுகின்றன. முட்டை ஓடுகள் அலங்கார வேலைகளுக்குப் பயன்படுகிறது. ஈமு கோழியின் எண்ணெய் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. கோழிக்கறி, ஆட்டுக்கறிக்கு இணையாக ஈமு கோழிக்கறி இனி இந்தியாவில் செல்வாக்கு பெறும்” என்று ஈமு பண்ணை நிறுவனங்களும் ஊடகங்களும் ஆரூடம் கூறுகின்றன. ஆனால், ஈமுவின் இறைச்சியை மிகவும் சொற்பமானவர்களே சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடுபவர்கள் கூடச் சோதனை அடிப்படையில்தான் சாப்பிடுகிறார்களே தவிர, ஈமு கோழி இறைச்சியை ருசிப்பதற்காக அல்ல.
அப்படியென்றால் ஈமு கோழிப்பண்ணை நிறுவனங்கள் எப்படித் தொழில் நடத்த முடிகிறது என்ற கேள்வி எழலாம். இத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் விவசாயிகளுக்கு , அடுத்தடுத்து வந்துசேரும் விவசாயிகளின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்படுகிறது. “”எனக்கு முறையாகப் பணம் கிடைத்துவிட்டது” என்று ஆரம்பத்தில் இத்திட்டத்தில் சேரும் விவசாயி தெரிவிப்பதால், மற்றவர்களும் நம்பிக்கை பெற்று பணத்தைக் கட்டுகிறார்கள். இது சங்கிலி போல் தொடர்கிறது. முன்னால் வந்தவனுக்கு பின்னால் வந்தவனின் முதலீட்டுப் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் இக்கோழியை வளர்த்து முட்டைகளை விற்கின்றனர். முட்டை வியாபாரம் மட்டும்தான் நடக்கிறதே தவிர, கறி வியாபாரம் எதுவும்நடப்பதில்லை.
ஈமு வளர்ப்புக்கு நிலமும் நேரமுமில்லாதவர்களுக்கு, நிறுவனங்களே முதலீடு செய்பவரின் சார்பாக ஒரு இடத்தில் பண்ணையை அமைத்து கோழிகளைப் பராமரிக்கும் திட்டத்தை வைத்துள்ளன. இத்திட்டத்திலும் கணிசமானவர்கள் இணைந்துள்ளார்கள். முதலீடு செய்தவர்கள் அவ்வப்பொழுது தங்கள் பண்ணையைப் பார்வையிட்டு வரலாம். இப்படி முதலீடு செய்தவர்கள் பார்வையிடச் செல்லும் பொழுது, ஒரே பண்ணையை திருப்பித் திருப்பி முதலீட்டாளர்களுக்கு காட்டி, “”இதுதான் உங்கள் பண்ணை” என்று முதலீட்டாளர்களை இந்நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இப்படி ஈமு வளர்ப்பைக் கொண்டு, விவசாயிகளை ஏய்த்தும் பல மோசடித் திட்டங்களின் மூலமாகவும் இந்நிறுவனங்கள் பல கோடிகளைச் சுருட்டியுள்ளன.
இன்றைய சந்தை நிலவரப்படி வளர்ச்சியடைந்த ஈமுவின் இறக்கை முதல் நகங்கள் வரை அனைத்தையும் விற்றாலும் கூட, அதனின் மொத்த மதிப்பு ரூ.25,000/ ஐக்கூடத் தாண்டாது. ஆகையால் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிற்கும் பொழுது முட்டை கொள்முதலும் நிறுத்தப்பட்டு, கம்பெனியும் காணாமல் போய்விடும். முதலீட்டு பணமும் திரும்பி வராது. இந்த மோசடியில் ஈமு வெறும் கண்கட்டு வித்தையாக மட்டும் பயன்படுகிறது.
உலகமயமாக்கலின் விளைவாக மக்களின் வேலை வாய்ப்புகள், வாழ்வாதாரங்கள் பிடுங்கப்படுகின்றன. அதேநேரத்தில் மக்களை நுகர்வு வெறியில் இழுத்து, உழைப்பின் மேலிருந்த மதிப்பீடுகள் ஒழிக்கப்பட்டு, சம்பாதிப்பதற்கான நெறிமுறைகள் உடைக்கப் படுவதும் நடந்து வருகிறது. இந்தச் சூழல் ஈமு வளர்ப்பு போன்ற போன்சி திட்டங்களுக்கு உரமாக அமைகிறது. ஆகையால், விவசாயிகளும் உழைக்கும் மக்களும் உலகமயமாக்கலுக்கு எதிராக நின்று, இழந்து வரும் வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதாரங்களையும் மீட்க, மோசடியை மூதலனமாகக் கொண்டுள்ள ஈமு கோழி வளர்ப்பு போன்ற திட்டங்களை எதிர்த்துப் போராட முன்வரவேண்டும்
Friday, July 6, 2012
பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!
பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!
10 Jun 2012
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?
பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம்
திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை
நிறைய பணமும், உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில்
பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும்
இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது
குறித்து சிறிது ஆராய்வோம்.
மனதில் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த
கற்பனை கோட்டைகளை எழுப்பிவிட்டு இந்தியர்கள் வளைகுடா நாடுகளை நோக்கி
பறக்கின்றனர். சூட்டினால் தகிக்கும் பாலைவன மண்ணில் ஒரு பூலோக சுவர்க்கத்தை
தங்களது வாழ்க்கையில் கட்டலாம் என்ற நம்பிக்கையில் தாயகத்தை துறந்து
அந்நிய தேசத்திற்கு செல்லுகின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தாம்
சந்திக்கவிருக்கும் நெருக்கடிகள் ஒவ்வொன்றாக தென்பட துவங்குகிறது.
வானமும், பூமியும் கைவிட்ட உலகம்.
நதிகளும், வயல் வரப்புகளும், மரங்களும், கிளிகளும் இல்லாத நாடு.
குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்தால் மண்டையை பிளக்கும் சூடு.
இதனை விட சொந்த ஊரையும், குடும்பத்தையும் பிரிந்த வேதனை. மேலும் அவர்களது
பாதுகாப்புக் குறித்த கவலை.
ஒரு மரத்தைப் பறித்து இன்னொரு நாட்டில் கொண்டு போய் நட்டால் ஏற்படும் அதே நிலைமைதான் வளைகுடா வாழ் இந்தியர்களின் நிலைமையும்.
மாறிய காலச்சூழலுடன் ஒத்துப்போகாத
உடல்நிலை அவர்களது முக்கிய பிரச்சனையாக மாறுகிறது. காற்று, நீர், உணவு
இவற்றில் ஏற்படும் திடீர் மாற்றம் செடி கொடிகளைப் போலவே அவர்களது மனமும்
வாடிப்போகிறது. இந்த வாட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்து போவோரும்
உண்டு.
கவலைகளுக்கும், நெருக்கடிகளுக்கும்
மத்தியில் அவர்கள் தங்களது சொந்த ஆரோக்கியத்தைக் குறித்து மறந்து
போகின்றார்கள். முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கை முறை வளைகுடா வாழ்
இந்தியர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.
சிண்ட்ரோம் எக்ஸ்
வளைகுடா வாழ் இந்தியர்களை காத்திருக்கும் நோய்களின் கூட்டுப் பெயர் தாம் சிண்டோம் எக்ஸ். இதனை செல்லப் பெயர் என நீங்கள் கருதினாலும் தவறில்லை.
வளைகுடா வாழ் இந்தியர்களை காத்திருக்கும் நோய்களின் கூட்டுப் பெயர் தாம் சிண்டோம் எக்ஸ். இதனை செல்லப் பெயர் என நீங்கள் கருதினாலும் தவறில்லை.
நீரழிவு(சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரோல்,
இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய நோய்கள் அடங்கியதுதான் சிண்ட்ரோம் எக்ஸ்.
இவையெல்லாம் வாழ்க்கை முறை மாறுவதால் உருவாகும் நோய்களாகும். மிக விரைவில்
வளைகுடா வாசிகள் இந்த நோய்களின் பிடியில் சிக்கிவிடுகின்றார்கள்.
வாழ்க்கை முறை ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை இதில் இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.
வளைகுடா வாசிகளின் வாழ்க்கை முறையில்
ஏற்படும் மாற்றம் உடலின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாக பாதிக்கும் வேளையில்தான்
நோய்களும் ஒவ்வொன்றாக குடிக்கொள்கிறது.
சொந்த உடல்நிலைக் குறித்து அவர்களில்
பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை. இவ்வாறு சிண்ட்ரோம் எக்ஸ் அல்லது வேறு
ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை கழிக்கின்றார்கள் வளைகுடா
வாசிகள்.
வளைகுடா வாசிகளை(வளைகுடா வாழ் இந்தியர்களை) நோயில் தள்ளும் காரணிகள்
மனச்சோர்வு(depression) நோய்களை உருவாக்கும் மனோரீதியான பிரச்சனைகள்
நாட்டையும், வீட்டையும் துறந்து செல்லும்
இந்தியர்களை முதலில் பாதிப்பது நெருக்கடிகளாகும். குடும்பத்தைக் குறித்த
கடுமையான கவலை, புதிய இட சூழலுடன் பொருந்திப் போவதில் ஏற்படும் சிரமம், பணி
இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகள், பணிச் சுமை, வேலையில் அதிருப்தி,
தனிமை ஆகியன மனநெருக்கடிகளை உருவாக்குபவையாகும்.
ஓய்வு, உல்லாசம், நிம்மதியான உறக்கம்,
உடற்பயிற்சி, நட்புறவுகள் இவற்றையெல்லாம் புதிதாக வளைகுடா செல்லும் நபர்
இழக்கவேண்டிய நிலைமை உருவாகிறது.
மன நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிலர்
நிம்மதியை தேடுவதாக கூறி புகை, மதுபானம் போன்ற தீயப்பழக்கங்களுக்கு
அடிமையாகிப் போகின்றனர். உள்ளத்திற்கும், உடலுக்கும் இடையே நெருங்கிய
தொடர்பு இருப்பதால் மன நெருக்கடிகளின் பலன் உடல் ஆரோக்கியத்தை பெரிதும்
பாதிக்கிறது.
மனோரீதியான நெருக்கடிகள் காரணமாக வாழ்க்கை
முறையில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் நோய்கள் ஒவ்வொன்றாக வளைகுடா
வாசிகளை பாதிக்கத் துவங்கின்றன.
வளைகுடா வாழ் இந்தியர்களில் ஒரு குறிப்பிட
சதவீதம் பேர் மனச்சோர்வால்(depression) பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள
மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் இத்தகைய
மனச்சோர்வுக்கு உரிய சிகிட்சையை பெற முயலுவதில்லை.
மன ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும்
வேளையில் குடும்பத்தினரின் ஆதரவும், ஆறுதலும் கிடைக்காமல் போகும் பொழுது
அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெரும்பாலும் இதன் இறுதி முடிவு தற்கொலையில் சென்று முடிவடைகிறது.
வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்வோரில் 43
சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர் என புள்ளிவிபரம் கூறுகிறது. இதற்கு முக்கிய
காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:
1.மோசமான பணி சூழல்
2.மோசமான வாழ்க்கை சூழல்
3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை
4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு
5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில் சந்திக்கும் பிரச்சனைகள்
6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்
7.குடும்பத்தினரின் பிரிவு
8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆகியனவாகும்.
சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள் ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.
எதற்கும் தீர்வு காணமுடியாத சூழல்
உருவாகும் பொழுது தற்கொலையில் அபயம் தேடுகின்றார்கள். மேற்கூறிய
பிரச்சனைகள் குறித்து முன்னரே அறிந்திருந்தால், அவற்றை கையாளும்
பக்குவமும், பொறுமையும் இருந்தால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண
முடியும். தற்கொலை எந்தப்பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்ற புரிந்துணர்வு
வேண்டும். இத்தகைய நபர்கள் மட்டுமே கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு சென்று
சம்பாதிப்பது சிறந்தது. அவ்வாறு இல்லையெனில், சொந்த நாட்டிலேயே தொழில்
புரிந்து கிடைக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான் உசித்தம்.
உணவு பழக்க வழக்கம்
சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது என்பதுதான் சரியான காரணம்.
இட்லி-சாம்பார், தோசை-சட்னி, இவையெல்லாம்
வளைகுடாவாசிகளில் பெரும்பாலோருக்கு கனவாக மாறிவிடுகிறது. காய்கறிகள் இங்கே
கிடைக்காமலா உள்ளது? ஆனால், வேலை முடிந்து சோர்வாக வரும் பொழுது காய்கறிகளை
நறுக்கி, தேங்காயை துருவி உணவு சமைக்க அலுப்புத் தோன்றும். ஆகவே குக்கரில்
சாதம் தயாரித்து, ஏதேனும் ஒரு குழம்புடன் முடித்துக்கொள்ளும் போக்கே
பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது
சிக்கன் கறியாகும். தயாரிப்பதற்கு எளிது என்பதாலும், விலை மலிவு என்பது
சிக்கனை தேர்வுச்செய்ய காரணமாகும். இதனை 2,3 நாட்கள் உபயோகிப்போரும் உண்டு.
இவ்வாறு சிக்கன் அன்றாட வாழ்க்கையின் உணவாக மாறுகையில் கொலஸ்ட்ரோல்
சிண்ட்ரோம் உடலை ஆளத்துவங்கும்.
வளைகுடாவாசியின் உடல் எடைபோட்டு க்ளாமர்
முகத்தில் தெரிந்தாலே புரிந்துகொள்ளலாம் இது சிக்கனின் கொழுப்பு என்பதை.
அதிக வருமானம் உடையோர் மீன் வகைகளை உண்பார்கள். இதுவும் கொலஸ்ட்ரோலை கை
நீட்டி அழைக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. காரணம் மாமிச உணவின்
கொழுப்பை குறைக்க நார்ச்சத்துள்ள காய்கறிகளை இவர்கள் உபயோகிப்பதில்லை.
இவ்வாறு பெரும்பாலோர் அதிக உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர்.
சிக்கன் உணவின் அளவுக்கதிகமான உபயோகத்தால்
மூல நோயால் அவதியுறுவோரும் உண்டு. மேலும் சுத்தமான குடிநீரை தேவைக்கேற்ப
அருந்தாதும் இப்பிரச்சனையை உருவாக்குகிறது. கோடை காலங்களில் சூட்டையும்,
தாகத்தையும் தாங்கமுடியாமல் கிடைத்த பானங்களை வாங்கி அருந்துவதால் சிறுநீரக
கல்லும், மஞ்சள் காமாலை நோயும் உருவாக காரணமாகிறது.
உணவும், உறக்கமும் முறை தவறும் பொழுது
10-18 மணிநேரம் தொடர்ச்சியாக பணியாற்றும்
சூழல் ஏற்படும் இவர்களுக்கு குறிப்பிட நேரத்தில் உணவு சாப்பிடவோ, தூங்கவோ
முடியாது. ஸ்நாக்சும், ஏதேனும் கோலாக்கள் மூலமாக தற்காலிக பசியை
அடக்குவோரும் உண்டு. ஏதேனும் ஒரு வேளையில் இவர்கள் வயிறு முட்ட
சாப்பிடுவார்கள். இது உடல் நலனுக்கு கேடானது என்பது நமக்கு தெரிந்த விஷயம்.
இன்னும் சிலர் உண்டு. அவர்களுக்கு காலை உணவே கிடையாது. பெரும்பாலும் காலை
உணவை தவிர்ப்போர் காசை மிச்சம் பிடிக்கவே இந்த வழியை கையாளுகின்றனர். இரவு
தாமதமாக உணவை உண்டு, காலையில் தாமதித்து எழுந்து மதிய உணவை சாப்பிட்டால்
காலை உணவை தவிர்க்கலாம் என்ற கொள்கையை சிலர் வகுத்து வைத்துள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை ஏறுமுகமாக இருக்கும் சூழலில் சிலர் காசை சேமிப்பதற்காக தங்களது உடல் ஆரோக்கியத்தை பலி கொடுக்கின்றனர்.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைதான் வளைகுடா
வாசிகளுக்கு சொந்தம். நேரமின்மையே அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டைப்போல
வளைகுடா நாடுகளில் வேலைக்கு மட்டம் போட முடியாது. ஒரு நாள் லீவு கிடைக்கவே
பெரும் பாடுதான். இந்நிலையில் அன்றாட வேலையை முடித்து விட்டு, உணவு
தயாரித்து, துணிகளை கழுகி, வீட்டிற்கு போன் செய்யவே நேரம் சரியாக
இருக்கும். இந்நிலையில் உடற்பயிற்சியைக் குறித்து சிந்திக்க முடியுமா? ஆகவே
ரேசன் போல் கிடைக்கும் நேரத்தில் அனைவரும் தவிர்க்க விரும்புவது உடற்
பயிற்சியாகும்.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையும்,
கொழுப்பான உணவு வகைகளைக் கொண்ட வாழ்க்கை முறையும் இணையும் பொழுது இயல்பாகவே
உடல் நோய்களின் இருப்பிடமாக மாறிவிடும். நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி)
போன்ற வாழ்க்கை முறையினால் உருவாகும் நோய்கள் ஏற்பட உடற்பயிற்சி இல்லாத
வாழ்க்கையே காரணமாகும்.
ஓய்வில்லாத பணி!
பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி
வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம் ஆகும். அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு
மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து
வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு என்பது செயல் திட்டத்திலேயே இல்லை.
பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள் உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது
முதுகு வலி.
முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம்
ஆகும். வளைகுடா வாசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித
பஞ்சமுமில்லை. இத்துடன் உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது
இயல்பே.
நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது
ஆரோக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால்
முதுகு வலி இல்லாத வாழ்க்கையை சொந்தமாக்கலாம்.
ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!
பாலைவன மண்ணை வீசியடிக்கும் காற்றில்
பறந்து வரும் மண் துகள்கள் மூச்சுக் குழாய்க்குள் செல்கிறது. தாமதமில்லாமல்
இவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிப்படைகின்றனர். மேலும் பாலைவனப் பகுதிகளில்
உருவாகும் மணல் காற்றும், புகையும் வெளியிடங்களில் வேலை பார்ப்போருக்கு
அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் bronchitis என அழைக்கப்படும்
மூச்சுக்குழாய் அழற்சி நோய் ஏற்படுகிறது.
கடுமையான வெப்பம்
வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.
கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு
நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ் டிகிரியை அடையும். இவை இரண்டுமே
அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு
சிந்திக்க கூட முடியாது. ஆனால் வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள்
வெப்பத்தையும், குளிரையும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும்,
நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke
காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை
வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க
ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர்.
இவையெல்லாம் உயிரை காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது
அல்ல.
பெனடால் என்ற உற்றத்தோழன்
வளைகுடா வாசிகளுக்கு பெனடால் என பெயர்
சூட்டிய பாரசிட்டாமோல் மாத்திரைதான் அவர்களின் பெரியதொரு பாதுகாவலன்.
தலைவலியா? காய்ச்சலா? ஜலதோஷமா? ஒரு பெனடாலில் அவர்கள் ஆறுதலை
தேடிக்கொள்வார்கள்.
வளைகுடாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு
காலநிலையில் ஏற்படும் மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கம்.
தலைவலியும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் உண்டு. இதற்கெல்லாம்
மருத்துவமனைக்கு சென்று காண்பிக்கும் வழக்கம் இல்லை. காராணம், சாதாரண
நபர்களால் வளைகுடா நாடுகளில் சிகிட்சை செலவை தாங்கமுடியாது. வேலைச்செய்து
கிடைக்கும் சம்பாத்தியம் முழுவதும் ஒரேயடியாக செலவழிந்து விடுமே என அஞ்சி
இவர்கள் எந்த நோய் வந்தாலும் உடனே பெனடாலை விழுங்குவதை வழக்கமாக
கொண்டுள்ளனர். இவ்வாறு பெனடால் வளைகுடா வாசிகளின் உற்றத் தோழனாக
மாறிவிட்டது. இதன் எதிர்விளைவுகளை குறித்து சிந்திக்கவும் அவர்களுக்கு
நேரமில்லை.
பல வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு
திரும்பிய பிறகே பெனடாலின் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு
தெரியவருகிறது. பெனடாலை வழக்கமாக உபயோகிக்கும் பழக்கமுடையவர்களுக்கு
சிறுநீரகத்தையும், இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் சாத்தியக் கூறுகளை
உள்ளடக்கிய பாரசிட்டாமோல் மாத்திரையைத்தான் தாம் இதுவரை உற்றத் தோழனாக
கருதினோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு
வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள் வளைகுடாவுக்கு வேலைக்கு
செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச் சூழல் அவர்களை விரைவில்
வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில் பிடியில் சிக்கவைக்கிறது.
Tuesday, July 3, 2012
ஜப்பானியக் காடை வளர்ப்பு:
ஜப்பானியக் காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழகத்தில் பிரபலமாகிவரும் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். காடைகள் பொதுவாக முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப் படுகின்றன. இருப்பினும் காடைகள் இறைச்சிக்காகவே அதிகம் வளர்க்கப்படுகின்றது. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்பு தொழிலானது பெரிய பண்ணைத் தொழிலாகவே வளர்ந்துள்ளது.
இறைச்சிக்காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடைகளை பொறுத்தவரையில் அவற்றை மிகக்குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். கோழி வளர்ப்பினைப் போன்று அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானியக் காடைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரும். கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகிவிடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக்காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்வதால் தீவனச்செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகிறது. இறைச்சிக்காக வளர்க்கும்பொழுது, காடைகளைத் தரையிலோ (ஆழ்கூளக் குப்பை முறை) அல்லது கூண்டு முறையிலோ வளர்க்கலாம்.
ஆழ்கூள முறை: இறைச்சிக்காக ஜப்பானியக் காடையை ஆழ்கூள முறையில் வளர்க்கும்பொழுது ஒரு சதுர அடிக்கு 6 காடைகள் வரை வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்து பின்னர் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேம்பட்டு காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச்செலவும் ஏற்படுத்தும். எனவே, காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுகளுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.
கூண்டுமுறை வளர்ப்பு: இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும்பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம், இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 100 காடைக்குஞ்சுகள் வரை வளர்க்கலாம். அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம், இரண்டரை அடி அகலம், 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.
தீவனம் அளித்தல்: ஜப்பானியக் காடைகளுக்கும், கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தலாம். காடைகளுக்கு குஞ்சு பருவத்தில் அளிக்கும் தீவனம் 26 முதல் 28 சதவீதம் புரதமும், 270 கி.கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வகைத் தீவனத்தை முதல் 6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீனிகளை மாற்றிப் பயன்படுத்த திட்டமிடும்பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதவீத புரதமும், 2800 கி.கலோரி எரிசக்தியும் உள்ள தீனியை உபயோகிக்கலாம்.
ஜப்பானியக் காடை வளர்ச்சி: சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடையுள்ள காடையை சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கிறது. காடை இறைச்சியில் அதிக புரதமும் (20.5 சதவீதம்), குறைந்த அளவு கொழுப்பும் (5 சதவீதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. (தகவல்: ரா.தங்கத்துரை, பிஎச்.டி., வெ.பழனிச்சாமி, பிஎச்.டி., வீ.தவசியப்பன், எம்.வி.எஸ்சி., வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206. 04577-264 288)
ஜப்பானியக் காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழகத்தில் பிரபலமாகிவரும் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். காடைகள் பொதுவாக முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப் படுகின்றன. இருப்பினும் காடைகள் இறைச்சிக்காகவே அதிகம் வளர்க்கப்படுகின்றது. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்பு தொழிலானது பெரிய பண்ணைத் தொழிலாகவே வளர்ந்துள்ளது.
இறைச்சிக்காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடைகளை பொறுத்தவரையில் அவற்றை மிகக்குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். கோழி வளர்ப்பினைப் போன்று அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானியக் காடைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரும். கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகிவிடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக்காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்வதால் தீவனச்செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகிறது. இறைச்சிக்காக வளர்க்கும்பொழுது, காடைகளைத் தரையிலோ (ஆழ்கூளக் குப்பை முறை) அல்லது கூண்டு முறையிலோ வளர்க்கலாம்.
ஆழ்கூள முறை: இறைச்சிக்காக ஜப்பானியக் காடையை ஆழ்கூள முறையில் வளர்க்கும்பொழுது ஒரு சதுர அடிக்கு 6 காடைகள் வரை வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்து பின்னர் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேம்பட்டு காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச்செலவும் ஏற்படுத்தும். எனவே, காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுகளுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.
கூண்டுமுறை வளர்ப்பு: இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும்பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம், இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 100 காடைக்குஞ்சுகள் வரை வளர்க்கலாம். அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம், இரண்டரை அடி அகலம், 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.
தீவனம் அளித்தல்: ஜப்பானியக் காடைகளுக்கும், கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தலாம். காடைகளுக்கு குஞ்சு பருவத்தில் அளிக்கும் தீவனம் 26 முதல் 28 சதவீதம் புரதமும், 270 கி.கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வகைத் தீவனத்தை முதல் 6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீனிகளை மாற்றிப் பயன்படுத்த திட்டமிடும்பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதவீத புரதமும், 2800 கி.கலோரி எரிசக்தியும் உள்ள தீனியை உபயோகிக்கலாம்.
ஜப்பானியக் காடை வளர்ச்சி: சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடையுள்ள காடையை சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கிறது. காடை இறைச்சியில் அதிக புரதமும் (20.5 சதவீதம்), குறைந்த அளவு கொழுப்பும் (5 சதவீதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. (தகவல்: ரா.தங்கத்துரை, பிஎச்.டி., வெ.பழனிச்சாமி, பிஎச்.டி., வீ.தவசியப்பன், எம்.வி.எஸ்சி., வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206. 04577-264 288)
முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!
வீட்டில்
வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது போல முயல் வளர்ப்பு தொழிலும்
மிகுந்த லாபம் தரக் கூடியது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல்
வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம.

நன்றாக வளர்ந்த முயல்களை கிலோ ஒன்றிற்கு தரத்திற்கு தகுந்தாற்போன்று 300 முதல் 350,400,500,600 என ரூபாய் வரைக்கும் விற்கலாம்..
இதற்கு தேவையான முதலீடு சுமார் 30,000 மட்டும் போதுமென்கிறார்கள் முயல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்..
ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும்.
கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.
உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.
வகைகள்
இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும்.
ரோமம் விற்றால் காசு
சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம்.
முயல் இறைச்சியை பிரியாணி, சில்லி, ரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம். சந்தை வாய்ப்பு ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள், விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.
கறியில் மருத்துவ குணம்
முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.
தினமும் 2 மணி நேரம் போதும்
முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம்.
கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம்.
முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும்.
கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம்.
பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும்.
குட்டி ஈனுதல்
பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றன. அவை குட்டி ஈனும்
போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 – 30 நிமிடத்திற்குள்
குட்டி ஈனுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும்
தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம். அச்சமயத்தில் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும். அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம். |
வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?
முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும்.
முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம்.
பல்கலையில் பயிற்சி
குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது.
முயலை
காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும்.
வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு
கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும்.
நோய்கள்
முயலுக்கு
தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள்
ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
நலம் தரும் நாட்டு கோழி பண்ணை!!!
நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம்,
நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் இதன் இறைச்சியும் விலை
அதிகமாக இருக்கிறது.நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறது? நாட்டுக்
கோழிகளை யாரும் "பிராய்லர்" கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை
முறையில் வளர்ப்பதில்லை. கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான்
வளர்க்கிறார்கள். அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லை.
ஆனால் பிராய்லர் கோழிகளை இன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து
எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை பெற
முடிகிறது. அவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்ற முடிகிறது.இந்த
பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால் உப்பிய பலூன்
போல பெருத்து 47 நாட்களில் 2 கிலோவை தாண்டி விடுகிறது. இந்த
கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித
உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.
ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.மேலும் நாட்டு கோழி பண்ணை அமைக்க பிராய்லர் கோழிகளை போல மிக அதிக செலவிலான செட் போட தேவையில்லை,சாதாரண மிக சிறிய அளவிலான ஓட்டைகள் கொண்ட கம்பி வலை 'பெண்சிங்' போதுமானது.இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்' கிராமப்புற பெண்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பது பற்றிய 3 மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளது. தபால் வழியில் கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள், தீவனங்கள்,நோய் கண்டறியும் முறை, பண்ணை அமைத்தல் உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றி சொல்லித் தர போகிறார்கள்.
இந்த பாடத்தை படித்து விட்டால், கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம். பிறகு வெற்றிகரமாக பெரிய பண்ணைகளை தொடங்கலாம். இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும். இவ்வளவு தான் தகுதி.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை. என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள். படித்து பாஸாகலாம்.
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.மேலும் நாட்டு கோழி பண்ணை அமைக்க பிராய்லர் கோழிகளை போல மிக அதிக செலவிலான செட் போட தேவையில்லை,சாதாரண மிக சிறிய அளவிலான ஓட்டைகள் கொண்ட கம்பி வலை 'பெண்சிங்' போதுமானது.இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்' கிராமப்புற பெண்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பது பற்றிய 3 மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளது. தபால் வழியில் கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள், தீவனங்கள்,நோய் கண்டறியும் முறை, பண்ணை அமைத்தல் உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றி சொல்லித் தர போகிறார்கள்.
இந்த பாடத்தை படித்து விட்டால், கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம். பிறகு வெற்றிகரமாக பெரிய பண்ணைகளை தொடங்கலாம். இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும். இவ்வளவு தான் தகுதி.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை. என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள். படித்து பாஸாகலாம்.
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)